கோபி அருகே ஒரே லாரியில் 23 மாடுகளை அடைத்த லாரியை பறிமுதல்

6091பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே ஒரே லாரியில் 23 மாடுகளை அடைத்து துன்புறுத்தி ஏற்றி வந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த கோபி காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து மாடுகளை லாரியில் அடைத்து கோபி வழியாக வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்றவர்கள் லாரியை தடுத்து நிறுத்தி லாரியை சோதனை செய்துள்ளனர், அப்போது லாரியில் உரிய பாதுகாப்பின்றி 23 மாடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதும், அதில் ஒரு மாடு உயிரிழந்த நிலையில் இருப்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து லாரியை சிறைபிடித்தவர்கள் அளித்த புகாரின் பேரில் லாரியை பறிமுதல் செய்த கோபி காவல்துறையினர் லாரியில் உயிருடன் இருந்த மாடுகளை மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாடுகள் அந்தியூரில் வாங்கப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து உரிய பாதுகாப்பின்றி 23 மாடுகளை ஒரே லாரியில் ஏற்றி வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சபீர், மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷகீல், முகமது அப்சான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி