சென்னையில் சிக்கிய ரூ.1.42 கோடி ஹவாலா பணம்

554பார்த்தது
சென்னையில் சிக்கிய ரூ.1.42 கோடி ஹவாலா பணம்
நாட்டில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே சென்னையில் 1.42 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை போலீஸார் சோதனையில் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணத்தை வைத்திருந்த யாசர் அரபாத் என்பதும், மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி