சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 9 மாதங்களாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தலையில் ரத்த காயத்துடன் வீட்டின் முன் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை முடிவில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேஷின் தாயாரிடம் விசாரித்தபோது, வீட்டின் சிலிண்டரை விற்று மது அருந்தியதாகவும் அதனை கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். அதனால் தலையில் கட்டையால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.