ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது

4647பார்த்தது
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்கள் தங்களது பிரச்சினைகளை குறித்து மனுக்களை கலெக்டரிடம் வழங்கி வந்தனர். கலெக்டர் நேரடியாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி அதிகாரிகளிடம் சொல்லி உரிய தீர்வு எடுத்து வந்தார். இதனால் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காட்சியளிக்கும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் தங்களது மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் வந்து பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை குறித்த மனுக்களை போட்டு செல்லலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இன்று காலை பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை புகார் பெட்டியில் போட்டு சென்றனர். இதைப்போல் ஈரோடு எஸ் பி அலுவலகத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி