நடு ரோட்டில் மூடப்படாத குழி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

61பார்த்தது
நடு ரோட்டில் மூடப்படாத குழி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கே. என். கே சாலை ரங்கா வீதியில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினை சீரமைக்கும் பணியின் காரணமாக சாலையை தோண்டி பணியை செய்துள்ளனர்.
இக்கால்வாய் பணி முடிந்த நிலையில் பணிக்காக தோண்டப்பட்ட சாலையின் குழியை சீரமைத்து தராமல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட சாலையின் குழியை சீரமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
++++

தொடர்புடைய செய்தி