பாமக வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம்

2223பார்த்தது
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, பள்ளிபாளையம், ஒட்டமெத்தை பகுதிக்கு வருகை தந்து பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம், பாராளுமன்ற அமைப்பாளர் என். பி. பழனிச்சாமி  மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி