டெய்லர் கடை தீ விபத்து

1544பார்த்தது
டெய்லர் கடை தீ விபத்து
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ(47). இவர், கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூ டிரஸ் மேக்கர்ஸ் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு மேத்யூ கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 3. 15 மணியளவில் மேத்யூவின் டெய்லர் கடையில் இருந்து புகை வெளி வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த 3 தையல் மிஷின்கள், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் தைக்காமல் வைத்திருந்த துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி