ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களிலுள்ள 90 பழைய தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கான வேலை உத்தரவு சான்றுகள் வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ரத்தினம்மா காளநாயக்கர், கவுன்சிலர்கள் மாதேஷ், முஜிபுல்லா, மாதேவம்மா, வட்டார வளர்ச்சி அலுவலர் குகானந்தன், வார்டு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேலை உத்தரவு சான்றிதழ்களை வழங்கினர்.