அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், வழங்கப்பட்டது.

52பார்த்தது
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், வழங்கப்பட்டது.
பவானிசாகர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
பவானிசாகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகள், எழுது பொருட்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பவானிசாகரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள் ளி திறக்கப்பட்டது. முதல் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பென்சில், ரப்பர், ஷார்ப்னர், அரை அடி ஸ்கேல் ஆகியவைகள் கொண்ட சிறிய பெட்டி பரிசாக வழங்கப்பட்டது. இதே போல மற்ற வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தலைமையில் தலைமை ஆசிரியர் தண்டபாணி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி