ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அடுத்த பண்ணாரி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் தனக்கு தானே தீ வைத்து கொண்டதால் உடலில் தீ பிடித்து மளமளவென எரிந்ததில் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். இதை கண்ட சிலர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவகுழுவினர். அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரனையில் கோவை மாவட்டம், சரவணம்பட்டி, எல். ஜி. பி காலனியை சேர்ந்த விஜயக்குமார் வயது 60 என தெரியவந்தது. அவரது உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளதாகவும், வந்தவுடன் மேற்கொண்டு விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.