
சித்தோடு அருகே டெய்லர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆயப்பாளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). அப்பகுதியில் டைலர் கடை நடத்தி வந்தார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மது அருந்த வேண்டாம் என அவரது மனைவி இந்துபிரியா கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், செந்தில்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து இந்துபிரியா அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.