ஈரோட்டில் நடந்த மாரத்தானில் ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர்கள்

69பார்த்தது
ஈரோடு திண்டலில் தனியார் அமைப்புகளின் சார்பில், 4ம் ஆண்டாக, செல்போனை ஓரம் வை கிரவுண்டில் கால வை என்ற தலைப்பில் மராத்தான் ஓட்டப் பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், நான்கு வயது முதல் 12 வயது வரை என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், 1000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டு, தங்களது திறனை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்கள், சிறுமியர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி