பெருந்துறை அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலி

5597பார்த்தது
பெருந்துறை அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலி
ஈரோடு, சென்னிமலை ரோட்டில் மணல்மேடு வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் சரவணன் (27). இவர் கடந்த ஒரு வருடமாக சென்னிமலை அருகே முகாசிபிடாரியூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் சரவணன் வேலைக்கு முகாசிபிடாரியூரில் இருந்து தனது பைக்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரில் மொபட்டில் வந்து கொண்டிருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியான போலோநாத் (34) என்பவர் திடீரென ரோட்டை கடப்பதற்காக குறுக்கே திரும்பியுள்ளார். அப்போது சரவணன் ஒட்டி சென்ற பைக் மீது போலோநாத்தின் மொபட் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் ரோட்டில் கீழே விழுந்துள்ளார்.

அப்போது பெருந்துறையில் இருந்து சென்னிமலை நோக்கி வந்த டாரஸ் லாரியின் முன் சக்கரம் ரோட்டில் கிடந்த சரவணனின் வயிற்று பகுதியில் ஏறிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணனை அந்த வழியே சென்றவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி