டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்

43962பார்த்தது
டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 (நாளை) முதல் வாக்குப்பதிவு நாளான வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 ஆகிய நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II (a) ஆகியவைகளின் கீழ், இந்த உத்தரவு சில வாரங்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்து இரவு 10 மணி வரை செயல்படும். தொடர் விடுமுறை காரணமாக இன்றைய தினம் மதுபாட்டிகளை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க மதுப்பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி