வீட்டில் இருந்தபடி வாக்கு செலுத்தும் 107 வயது மூதாட்டி

61பார்த்தது
வீட்டில் இருந்தபடி வாக்கு செலுத்தும் 107 வயது மூதாட்டி
மத்தியப் பிரதேசம் பன்னாவில் உள்ள மட்லா கிராமத்தில் வசிப்பவர் 107 வயதான குண்டாபாய் ராஜ்புத். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக தனது வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ளார். அதற்கான வாக்களிப்பு செயல்முறை நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில், வாக்குச்சாவடிக்கு செல்ல இயலாத முதியவர்கள், ஊனமுற்றோருக்கான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி