மாவட்ட தடகளப் போட்டிகளில் 800 வீரர்கள் பங்கேற்பு

72பார்த்தது
மாவட்ட தடகளப் போட்டிகளில் 800 வீரர்கள் பங்கேற்பு
ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில், ஈரோடு மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டியை வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தொடக்க விழா நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டிகள் குறித்து ஈரோடு மாவட்ட தடகள சங்க செயலாளர் எம். கோவிந்தராஜ் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட இளையோருக்கான 22-ம் ஆண்டு தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இரு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகளானது 14, 16, 18 மற்றும் 20 வயது என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. 60 மீட்டரில் தொடங்கி 5,000 மீட்டர் வரையிலான பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்போட்டிகள், குண்டு வீசுதல், வட்டு, ஈட்டி எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் உட்பட 72 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ளன. இன்று (4-ம் தேதி) போட்டிகள் நிறைவடைந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

தொடர்புடைய செய்தி