ஈங்கூர் ஸ்ரீ கங்கா பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு நாள் விழா

70பார்த்தது
ஈங்கூர் ஸ்ரீ கங்கா பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு நாள் விழா
பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் ஸ்ரீ கங்கா மெட்ரிக் பள்ளியில் உலக இயற்கைப் பாதுகாப்பு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் ஸ்ரீ கங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு நாள் விழா நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் ஸ்ரீ கங்கா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் கவிதா வரவேற்றார். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார்.

மெட்ரிக் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சியோடு தொடங்கிய விழாவில், பாசம் பவுண்டேஷன் அமைப்பின் தலைமை ஆலோசகர் திருமலை அழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொருளாளர் குப்பமுத்து, தி பாசம் பவுண்டேஷன்
அமைப்பின் தலைவர், விப்புல் ஜெயின், செயலர் யாசர் பொருளாளர் மணிமாறன், லக்கி லட்சுமணன், மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர். மாணவர்களும் மாணவிகளும் மரங்களைக் காப்போம் இயற்கையைப் பேணுவோம் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி