அந்தியூர் அருகே வாழைத்தார் விழுந்து தொழிலாளி பலி

84பார்த்தது
அந்தியூர் அருகே வாழைத்தார் விழுந்து தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓடைமேட்டை சேர்ந்தவர் முருகன் (48). கூலி தொழிலாளி. கடந்த 8-ந் தேதி வீட்டின் அருகே உள்ள வாழை மரத்தில் இருந்த வாழைத்தாரை முருகன் வெட்ட முயன்றார். அப்போது வெட்டப்பட்ட வாழைத்தார் எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் விழுந்தது. இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று (மார்ச் 30) பரிதாபமாக இறந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி