வெள்ளித்திருப்பூர் அருகே கள் விற்றவர் கைது

53பார்த்தது
வெள்ளித்திருப்பூர் அருகே கள் விற்றவர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள விராலிகாட்டூர் பகுதியில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அங்கு கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆயமரத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (48) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி