ஈரோடு மாநகராட்சியில் புதிதாக, 15. 89 கோடி ரூபாய் மதிப்பில், 5, 431 எல். இ. டி. , தெருவிளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மாயவரம், முத்தம்பாளையம், காளைமாட்டு சிலை, மரப்பாலம், வெண்டிபாளையம் உள்ளிட்ட மாநகராட்சி புறநகர் பகுதிகளில் கம்பம் நிறுவி விளக்குகள் பொருத்தப்பட்டு விட்டன.
இதன் தொடர்ச்சியாக அண்ணமார் பெட்ரோல் பங்க் முதல் ரிங் ரோடு வரை, 50 மின் கம்பங்களும், அண்ணமார் பெட்ரோல் பங்க் முதல் சோலார் வரை, 70 கம்பங்களும் அமைக்கப்பட்டு, எல். இ. டி. , விளக்குகள் பொருத்தும் பணி நேற்று (அக் 3) தொடங்கியது.
இன்னும் இரண்டு நாட்களில், இந்த விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.