ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது.
கடந்த புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கிய இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, அடுத்த மாதம் 7ம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த நான்கு நாட்கள், தொடர்ந்து புதுப்பாளையம் கோவிலில் குருநாத சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்நிலையில், புகழ்பெற்ற குதிரை சந்தை, மாட்டு சந்தை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடக்கும் பண்டிகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இன்று அந்தியூர் திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில், குடிநீர் வசதி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை தங்கு தடையின்றி செய்து கொடுக்க அறிவுறுத்தினார்.
மேலும் குதிரை சந்தை மாட்டு சந்தை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.
இது தவிர, நான்கு நாட்கள் நடக்கும் பண்டிகையின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வர் என்பதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.