ஈரோடு பி. பெ. அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (43). இவர் அதேப் பகுதியில் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மதுப்பழக்கம் இருந்ததால், அவருக்கு தொண்டையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவரை மது அருந்த வேண்டாம் என உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி, வீட்டில் தூக்கிட்டு அப்துல் சலீம் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மகன் முகமது ரகுமான் அளித்த புகாரின் பேரில், கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.