ஈரோடு: ஓட்டு போட்டவுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி பேச்சு

2909பார்த்தது
மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மக்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்குபதிவு செய்து வருவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குபதிவு நடைபெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் காலை 7 மணி முதல் மக்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மனைவி வரலட்சுமி மற்றும் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோருடன் வாக்குபதிவு செய்து குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்த தேர்தல் முடிவுகள் ராகுல்காந்தி ஸ்டாலின் கரங்களை பலப்படுத்தும் வகையில் அமையும் இந்திய கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பின்னர் ஸ்டாலின் ராகுல் காந்தி அந்நாட்டின் பிரதமர் யார் என்று முடிவு செய்வார்கள். மக்கள் விரோத ஆட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்த ஆட்சி முதலமைச்சர்களை ஆதாரமும் இன்றி கைது செய்த மோடி அவரது கூட்டாளிகள் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.

மக்கள் மோடியை துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். கர்நாடகாவில் மேகதாதில் அணை கட்டுவது தமிழக காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என தெரிவித்தார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி