அவசர பொதுக்குழு; குவியும் பாமக நிர்வாகிகள்

68பார்த்தது
அவசர பொதுக்குழு; குவியும் பாமக நிர்வாகிகள்
பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணி செயல் தலைவராக அறிவிக்கப்பட்டு, பாமக தலைவர் பொறுப்பை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எடுத்துக்கொண்டார். இதனால் பாமகவில் உட்கட்சி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அன்புமணி தானே தலைவர் என உறுதியாக இருக்கிறார். இதனிடையே, இன்று (ஏப்.13) பாமக நிர்வாகிகளை ராமதாஸ் தைலாபுரத்துக்கு நேரில் வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார். இதன்பேரில் அவசர பொதுக்குழு கூட்டத்துக்கு பாமக நிர்வாகிகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி