மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 10) இரவு 10 மணிவரை திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தருமபுரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.