தேர்தல் தோல்வி: காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... வீடியோ...

83பார்த்தது
கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்களின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி சிபிஐ-யின் வேட்பாளர் சுனில்குமாரை வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதையடுத்து, முரளிதரனின் தோல்வி குறித்து திருச்சூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்ட போது காங்கிரஸ் தொண்டர்களின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி