ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் புறக்கணிக்கப்படுவது தேர்தலை அல்ல, உண்மையில் புறக்கணிக்கப்படுவது திமுக தான். திமுக மீது நம்பிக்கை இல்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் முடிவும் காண்பிக்கிறது. திமுகவின் அராஜக அரசியலால் நேர்மையாக தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை இன்மையால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. திமுகவை 2026-ல் மக்கள் புறக்கணிப்பார்கள்.