லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், "தமிழக மக்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக இருக்கும். காரணம் அண்ணன் சீமான், அண்ணன் விஜய் இருக்கிறார்கள், இதற்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக இருக்கிறது, பாஜகவுடன் பாமக, அமமுக இருக்கிறது. ஆகையால், 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும்" என்று பேட்டியளித்துள்ளார்.