உ.பி: அம்ரோஹாவில் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதமேந்திய தாக்குதல் குழு ஒன்று தடிகளாலும் துப்பாக்கிகளாலும் உள்ளே நுழைந்து முதியவரின் குடும்பத்தை தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.