சர்க்கரை நோயாளிகளுக்கான ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொடங்குவதற்கான அரசாணை நேற்று (அக் .28) வெளியிடப்பட்டது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், ”பாதம் பாதுகாப்போம் திட்டம் சா்க்கரை நோய் பாத பாதிப்புகளை தவிா்ப்பதற்கும், கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் வழிவகை செய்யும். தமிழகத்தில் 80 லட்சம் போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்” என்று கூறப்பட்டுள்ளது.