சீனாவில் மேலும் 11 உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு
நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இருப்பினும், நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக, பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த கட்டிடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.