தமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை

56பார்த்தது
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (15,16 ஆகிய தேதிகள்) இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 17.02.2024 முதல் 21.02.2024 வரை; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட
வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை.

தொடர்புடைய செய்தி