ஆந்திர மாநிலம் எம்.சிங்கிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மின் கம்பத்தில் இளைஞர் ஏறுவதைப் பார்த்த மக்கள், உடனடியாக மின்சார சப்ளையை நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்றினர். சிறிது நேரம் மேலே படுத்திருந்த அவர் பின்னர் கீழே இறங்கினார். தகவல் அறிந்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.