நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். பரப்புரை கூட்டத்தில் முதியவர் ஒருவர் மது போதையில் குத்தாட்டம் போட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.