‘போதைப் பொருள் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது’ - நீதிமன்றம்

51பார்த்தது
‘போதைப் பொருள் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது’ - நீதிமன்றம்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் பல்வேறு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், “போதைப் பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கூடுதல் விழிப்புடன் போலீசார் நடவடிக்கை எடுத்தால் கஞ்சா புழக்கத்திற்கு வாய்ப்பே இருக்காது” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (மே 16) கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி