இந்திய ஏவுகணைகளின் தந்தை, இளைஞர்களின் கனவு நாயகன், மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது. உயர் பதவிகளில் இருந்தபோதும் மாணவர்கள், இளைஞர்கள் இடையே கல்வி அறிவை வளர்ப்பதிலும், தன்னம்பிக்கையை விதைப்பதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட அவர் கடந்த 2015-ல் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.