கமல் ரசிகர்களுக்கு ஜூன் மாதத்தில் டபுள் ட்ரீட்!

74பார்த்தது
கமல் ரசிகர்களுக்கு ஜூன் மாதத்தில் டபுள் ட்ரீட்!
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள "கல்கி AD 2898" படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 10 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இதே ஜூன் மாதத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே நேரத்தில் கமல் நடித்த இரு பிரம்மாண்டமான படங்களின் டிரைலர் கமல் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கப் போவது உறுதி.

தொடர்புடைய செய்தி