2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி! அண்ணாமலை பேட்டி (Video)

80பார்த்தது
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று (ஜூன் 5) சந்தித்தார். அப்போது, “தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் பெற்றது நேர்மையான வாக்குகள். கோவையில் நான் பெற்ற 4.50 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் நேர்மையாக கிடைத்த வாக்குகள். தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகள் பெற்ற இந்தியா கூட்டணி சகோதரர்களுக்கு வாழ்த்துகள். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது தான் எங்களது இலக்கு, நிச்சயம் பிடிப்போம். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்களவைக்கு அனுப்ப முடியாமல் போனது வருத்தம் தான்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24/7

தொடர்புடைய செய்தி