கூட்டணி மாறுகிறாரா உத்தவ் தாக்கரே? "இந்தியா" கூட்டணியில் பரபரப்பு...

810பார்த்தது
கூட்டணி மாறுகிறாரா உத்தவ் தாக்கரே? "இந்தியா" கூட்டணியில் பரபரப்பு...
"இந்தியா" கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது. உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என்ற உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு புறமிருக்க அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி