அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் - ரஜினிகாந்த்

40356பார்த்தது
அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் - ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு 'அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்' எனக்கூறியுள்ளார்.

நன்றி வீடியோ: https://twitter.com/i/status/1756261095822745871

தொடர்புடைய செய்தி