சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அருண் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கவில்லை. இது முதன்முறையாக நடந்துள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனித்தனி காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றார்.