பெரும்பாலானோர் செல்போனை படுக்கைக்கு அருகில் உள்ள சார்ஜிங் போர்டில் சார்ஜ் போடுவார்கள். 10 நிமிடங்கள் சார்ஜ் ஏறிய பிறகு, மீண்டும் எடுத்து உபயோகிக்க தொடங்குவார்கள். இதை தவிர்ப்பதற்கு ஒரு வழி, செல்போனை தொலைதூரத்தில் இருக்கும் போர்ட்டில் சார்ஜ் போட வேண்டும். இதுபோல செய்தால் படுக்கையில் மொபைல் போனை பயன்படுத்துவது குறையும். தொலைவில் இருப்பதால் படுக்கையில் இருந்து எழுந்து செல்ல தோன்றாது. தூக்கமும் வந்துவிடும்.