நெருப்பு மேல் நோக்கி எரிவது ஏன் தெரியுமா?

65பார்த்தது
நெருப்பு மேல் நோக்கி எரிவது ஏன் தெரியுமா?
நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு. வெப்பம், எரிபொருள், ஆக்சிஜன் மூன்றும் இருந்தால்தான் நெருப்பு உண்டாகும். நெருப்பிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல், சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. அப்போது காற்றைவிட, வெப்பக்காற்றின் எடை குறைவாக இருக்கிறது. அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, எடை குறைவான வெப்பக்காற்று மேல் நோக்கிச் செல்கிறது. விளக்கு, மெழுகுவர்த்தி, அடுப்பு என எதில் உருவாகும் நெருப்பும் மேல்நோக்கியே எரிகிறது.

தொடர்புடைய செய்தி