"பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய்"

81பார்த்தது
"பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய்"
மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த காரணத்தால், இல்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்து சட்டப்பேரவையை முடக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த ரகுபதி, "பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய். கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுகவினர் செயல்பட்டனர். அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி