அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வோம்!

53பார்த்தது
அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வோம்!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அவர்கள் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால், நாங்கள் பொது வாழ்விலிருந்து விலகுகிறோம். நிரூபிக்கவில்லை என்றால், அவர்கள் அரசியலிலிருந்து விலகுவார்களா? என திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி