அத்தையை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவன்

70பார்த்தது
அத்தையை பலாத்காரம் செய்ய முயன்ற மாணவன்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது அத்தை உடலுறவுக்கு சம்மதிக்காததால் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் சில நாட்களுக்கு முன்பு தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளான். அவருடைய மாமா ஏதோ வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் இரவில் தனியாக இருந்த தனது அத்தையை(37) பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது சிறுவனின் அத்தை கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்துபோன சிறுவன்அவனது அத்தையை தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளான்.

தொடர்புடைய செய்தி