ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏக்கள் சவால்

65பார்த்தது
ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏக்கள் சவால்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்கள் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயார் என ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் ஆகியோர் சவால் விடுத்துள்ளனர்.
மேலும், குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸும், அன்புமணியும் அரசியலில் இருந்து விலகத்தயாரா என திமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 57 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி