"விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன"

82பார்த்தது
"விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன"
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்துள்ளனர். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை" என விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி