இன்சுலினைக் கண்டுபிடித்து உலகளாவிய உயிரிழப்பைக் குறைத்தவர்கள் கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) ஆகிய இரண்டு அறிவியலர்கள். பாண்டிங், தான் கண்டுபிடித்த திரவத்துக்கு ‘ஐலெடின்’ (Isletin) என்று பெயரிடுகிறார். ஆனால், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிய மேக்ளியாட் ‘இன்சுலின்’ (Insulin) என்று அதை மாற்றிவிடுகிறார். அதைத் தொடர்ந்து லில்லி என்ற மருந்து நிறுவனம், வணிக முறையில் இன்சுலினைத் தயாரிக்கத் தொடங்கியது.