இன்று (ஜூலை 29) சர்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் அதன் சிறப்புகளை காண்போம்: புலியின் உறுமல் பெயர் பெற்றது. அது சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குக் கேட்கக்கூடியது. புலி இரவில் வேட்டையாடும். தான் வேட்டையாடியதில் சுமார் 27 கிலோ கறியை ஒரே நாளில் உட்கொள்ளும். இந்த உணவு செரிமானம் ஆக பல நாள் பிடிக்கும். எனவே தொடர்ந்து பல நாட்கள் பட்டினியாக கிடக்கும். தனது எச்சில் மூலமாக காயங்களை ஆற்றிக்கொள்ளும்.